கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு குளிப்பதற்கு தடை
2017-10-13@ 13:05:31

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையால், கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கம்பிகள் சேதமடைந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 37 நாட்களாக நீடித்தது.
அருவியில் தண்ணீர் குறைந்ததாலும், சேதமடைந்த கம்பிகள் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் பெரியகுளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேலும் செய்திகள்
சின்னசுருளி அருவியில் நீர்வரத்து சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிப்பு
நீர்வரத்து அதிகரிப்பால் பொங்கி வழியும் சுருளி அருவி!
12 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் குஷி
மலைப்பகுதியில் மழை சுருளி அருவிக்கு வந்தது ஊற்றுநீர்
சுருளியில் சூப்பராக கொட்டுது தண்ணீர் சுற்றுலாப்பயணிகள் கும்மாளம்
கும்பக்கரை அருவியில் தண்ணி வருது.. ஆனா குளிக்க முடியாது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்