தொடர் விடுமுறை எதிரொலி பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
2017-09-25@ 12:05:56

சிதம்பரம் : காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டதாலும், சனி, ஞாயிறு விடுமுறையாலும் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் கடலோரத்தில் அமைந்துள்ளது அழகிய பிச்சாவரம் சுற்றுலா மையம். இங்கு இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. இந்தியாவில் மேற்குவங்கம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களிலும், தமிழகத்தில் பிச்சாவரம், முத்து
பேட்டை ஆகிய பகுதிகளில் மட்டுமே அரிய வகை சதுப்பு நிலக்காடுகள் உள்ளது.
பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சுரபுன்னை செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன. சுரபுன்னை செடிகள் மருத்துவ குணம் வாய்ந்தவை என கூறப்படுகிறது. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். பிச்சாவரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஏராளமான படகுகள் இயக்கப்படுகின்றன.
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் வனத்துறை சார்பில் ரூ.9 லட்சம் செலவில் சூழல் சுற்றுலாவுக்காக கருத்தியல் காட்சி கூடம் கட்டப்பட்டுள்ளது. அதில் பிச்சாவரத்தில் உள்ள மாங்குரோவ் செடி வகைகள், வரும் பறவைகள் குறித்தும் விவரங்களை சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்வதற்காக காட்சி படங்கள் வைக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பிலும் விடுமுறை தினங்களில் படகுகள் இயக்கப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை தினம் மற்றும் காலாண்டு தேர்வு விடுமுறையால் ஏராளமான மாணவர்கள், சுற்றுலா பயணிகள் பிச்சாவரம் வந்தனர். அவர்கள் படகுகளில் சென்று அழகிய மாங்குரோவ் காடுகளை ரசித்தனர்.
மேலும் செய்திகள்
இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் கூட்டம் கூட்டமாக படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்து சுரபுன்னை காடுகளை ரசித்தனர்
கோடை விடுமுறை பிச்சாவரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் கடும் வெயிலால் அவதி
படித்துறை அமைத்து வாலாஜா ஏரியை சுற்றுலா தலமாக அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
அடிப்படை வசதிகள் ஏதுமில்லை சுற்றுலாத்துறை மெத்தனத்தால் மேம்பாடு அடையாத பிச்சாவரம் சுற்றுலா பயணிகள் அதிருப்தி
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!