குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
2017-09-12@ 14:30:11

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், குரங்கு அருவியில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை பகுதியில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து பெய்த தென்மேற்கு பருவ மழையால், ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகளவில் இருந்தது.
இதில் அவ்வப்போது, பொழிந்த கன மழைக்கு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின், சில நாட்களில் தண்ணீர் குறைந்ததையடுத்து மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக பொழிந்த மழையால், குரங்கு அருவிக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதில் நேற்று முன்தினம் பொழிந்த கனமழையால் குரங்கு அருவியில் நேற்று அதிகாலை முதல் தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட அதிகரிக்க துவங்கியது. பின் நேரம் செல்ல செல்ல, பயணிகள் குளிக்கும் இடத்தை தாண்டி தண்ணீர் கட்டுக்கடங்காமல் கொட்டியதுடன், செம்மண் நிறத்தில் தண்ணீர் வந்தது. இதையடுத்து, அங்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க, தடுப்புகள் அமைத்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
40 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் இன்று திறப்பு
51 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் திறப்பு
பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழும் பக்தர்கள்
கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையால் குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!