திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
2017-09-12@ 14:28:14

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரிக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக திற்பரப்பு அருவி உள்ளது. இங்கு குறிப்பிட்ட சீசன் என்றில்லாமல் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் கொட்டுவதால் எல்லா நாட்களிலும் கூட்டம் அலைமோதும். சமீபத்தில் கடும் வறட்சி காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்பட்ட காலத்திலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டி வந்தது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. வறண்டு காணப்பட்ட கோதையாற்றில் தண்ணீர் வருகை அதிகரித்துள்ளது.
இதனால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் அதிகம் கொட்டி வருகிறது. வழக்கமாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது தண்ணீர் அதிகளவு கொட்டுவதால் நேற்றுமுன்தினம் கடும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. குற்றால சீசனை நினைவு கூறும் வகையில் திற்பரப்பில் அவ்வப்போது மழையும், மிதமான காற்றும் வீசி வந்தது. மேகமூட்டமும் அடர்ந்து காணப்பட்டதால் ரம்யமான சூழல் நிலவியது. இது சுற்றுலா பயணிகளை உற்சாகம் கொள்ள செய்தது. திற்பரப்பு தடுப்பணையில் படகுகளில் பயணிகள் உல்லாச சவாரி மேற்கொண்டனர்.
திருவட்டார் அருகேயுள்ள ஆசியாவிலேயே உயரமான மாத்தூர் தொட்டி பாலத்தை பார்வையிட பொதுமக்கள் அதிகம் வந்து செல்வது வழக்கம். தற்போது தொட்டிபாலம் வழியாக செல்லும் சிற்றாறு பட்டணங்கால்வாயில் தண்ணீர் விடப்பட்டுள்ளது. தண்ணீர் பாய்ந்து செல்வதையும், இதமான சூழலையும் அனுபவிக்க ஏராளமான சுற்றுலாபயணிகள் வருகின்றனர். இங்கு நேற்று முன்தினம் கூட்டம் அலைமோதியதோடு வாகனம் நிறுத்தும் பகுதியில் இட வசதி இல்லாததால் நெருக்கடியான சூழல் காணப்பட்டது.
மேலும் செய்திகள்
குமரியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
திற்பரப்பில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
திற்பரப்பு அருவியில் உற்சாக குளியல் - 'செல்பி'
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு திற்பரப்பில் திரண்ட சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறை முடிந்தும் களை கட்டும் திற்பரப்பு அருவி
கோடை மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்