SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசின் பாராமுகத்தால் புறக்கணிக்கப்படும் தென்னை விவசாயிகள்

2017-11-19@ 00:43:14

சேலம்: கேரளாவை காட்டிலும் தமிழகத்தில் கொப்பரை கொள்முதல் விலை 50 சதவீதம் குறைவாக இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கேரளாவை போல், விலையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மட்டுமே தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய்கள் பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மழையளவு குறைந்ததால் நெல் சாகுபடியை குறைத்த விவசாயிகள் மாற்று பயிராக தென்னை சாகுபடிக்கு மாறியதால், தேங்காய் உற்பத்தி அதிகரித்தது.

கடந்த 2015-16ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கேரளாவில் 7 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலும், கர்நாடகாவில் 5 லட்சத்து 26 ஆயிரம் ஹெக்டேரிலும், தமிழகத்தில் 4 லட்சத்து 59 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலும் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 7ஆயிரத்து 429 மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்து கேரளா முதலிடத்திலும், 6 ஆயிரத்து 171 மில்லியன் உற்பத்தி செய்து தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது. இந்தியாவில் மொத்த உற்பத்தியில் 30 சதவீதம் தேங்காய்கள் தமிழகத்தில் சாகுபடி செய்யப்படுகிறது.
குறுகிய கால பயிர்களான நெல் சாகுபடியை தவிர்த்த விவசாயிகள் நீண்டகால பயிரான தென்னைக்கு மாறியவுடன் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்தது.

இதனை தொடர்ந்து, ஒரு ஹெக்டேருக்கு அதிக தேங்காய் உற்பத்தி செய்து சத்தீஸ்கர், ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. கேரளாவில் தேங்காய் மற்றும் கொப்பரைக்கு நல்ல விலை கிடைப்பதால் கேரள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் மாசிலாமணி கூறியது: மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2016-17ம் ஆண்டு, ெதன்னை விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.97.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதில், கேரளாவிற்கு ரூ.62.75 கோடியும், பிற மாநிலங்களுக்கு ரூ.34.85 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9641 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யும் கேரளாவுக்கு மொத்த நிதியில் 64 சதவீதமும், 16,508 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யும் பிற மாநிலங்களுக்கு 36 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.

தென்ைன வளர்ச்சி வாரியத்திடமிருந்து தமிழகத்திற்கு கூடுதல் நிதி பெற்றுக்கொடுக்க மாநில அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும். கடந்தாண்டுகளில் நிலவிய வறட்சியால் தமிழகத்தில் தேங்காய் உற்பத்தி பெருமளவில் குறைந்து கடந்த 8 மாதங்களாக தேங்காய் இருமடங்கு விலையேற்றத்துடன் காணப்படுகிறது. கேரளாவில் தேங்காய் கொள்முதலை அரசே ஏற்று நடத்துவதால், உரிப்பு தேங்காய் கிலோவுக்கு ரூ.60, கொப்பரை தேங்காய்க்கு ரூ.120 வரை விலை கொடுத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் கொப்பரை தேங்காய்க்கு அரசிடமிருந்து ரூ.59 மட்டுமே கிடைக்கிறது. கடந்த சில மாதங்களில் ரூ.5 க்கு விற்ற நடுத்தரமான தேங்காய் ரூ.15 முதல் ரூ.18 வரை விற்கப்படுகிறது. தற்போது, பெய்து வரும் தொடர் மழையால் தென்னை மரங்களில் காய்ப்பு தொடங்கியுள்ளதை தொடர்ந்து, இன்னும் ஓரிரு மாதங்களில் படிப்படியாக விலை குறைய வாய்ப்புள்ளது. ரேஷனில் பாமாயில் விற்பனையை நிறுத்தி தேங்காய் எண்ணைய் விற்பனையை கொண்டு வந்தால் மட்டுமே தென்னை விவசாயத்தை ஓரளவு காப்பாற்ற முடியும். இவ்வாறு மாசிலாமணி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்