SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகை சமந்தா - நாகசைதன்யா திருமணம்: கோவாவில் நடந்தது

2017-10-07@ 00:04:50

கோவா: நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யா காதல் திருமணம், நேற்று நள்ளிரவு கோவா வடேகர் பீச்சில் உள்ள டபிள்யூ நட்சத்திர ஓட்டலில்  நடந்தது. நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே,  இரண்டு மத முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை மெஹந்தி நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு சிறப்பு விருந்தினர்களுக்கு தடபுடல் விருந்து  வழங்கப்பட்டது. இதில் வட மற்றும் தென்னிந்திய வகை உணவு பரிமாறப்பட்டது.
நள்ளிரவு 11.52 மணிக்கு இந்து வைதீக முறைப்படி திருமணம் நடந்தது.  சமந்தாவுக்கு நாக சைதன்யா தாலி கட்டினார்.

இதையடுத்து, நள்ளிரவு 12 முதல் அதிகாலை  3 மணி வரை மீண்டும் விருந்து பரிமாறப்பட்டது.  திருமண விழாவில் நடிகர் வெங்கடேஷ் உள்பட பிரபல தெலுங்கு நட்சத்திரங்கள் சிலர் கலந்துகொண்டனர். இன்று மாலை 5.30 மணிக்கு கிறிஸ்தவ முறைப்படி சமந்தா, நாக சைதன்யா திருமணம் நடக்கிறது. இரண்டு மத முறைப்படி நடந்த திருமணத்தில்  பங்கேற்க வி.வி.ஐ.பிக்கள் சுமார் 200 பேர் தனி விமானத்தில் கோவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வரும் 10ம் தேதி ஐதராபாத்தில் சமந்தா, நாக சைதன்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் அறிமுகமான சமந்தா, பிறகு தெலுங்கு படங்களிலும் நடிக்கத் ெதாடங்கினார்.

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஏ மாய சேசாவே, ஆட்டோ நகர் சூர்யா, மனம் ஆகிய படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் காதல் மலர்ந்தது. இதையறிந்த இருவீட்டுப் பெற்றோரும் அவர்கள் திருமணத்துக்கு சம்மதித்தனர். இதையடுத்து கடந்த ஜனவரி 29ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. பிறகு சமந்தா, நாக சைதன்யா இருவரும் தனி வீட்டில் லிவிங் டூ கெதர் பாணியில் வாழ்ந்தனர். தற்போது அவர்கள் திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ள சமந்தா, இந்த ஆண்டு இறுதியில் நாக சைதன்யாவுடன் வெளிநாடு சென்று தேனிலவு கொண்டாடுகிறார். பிறகு ஐதராபாத்தில் குடியேறுகிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்