SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூணக்கடவு அணை நீர்மட்டம் உயர்வு

2017-09-23@ 12:23:37

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த தூணக்கடவு அணையின் நீர்மட்டம், தற்போது 20.50 அடியாக உயர்ந்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து பெய்த கனமழையால், பிஏபி திட்டத்திற்குட்பட்ட ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், டாப்சிலிப்பை அடுத்த மொத்தம் 22 அடி கொண்ட தூணக்கடவு அணைக்கு பரம்பிக்குளம் அணையிலிருந்தும், மழைபெய்யும் போது மலைமுகடுகளில் இருந்தும் தண்ணீர் வருகிறது.

இந்த தூணக்கடவு அணைக்கு, பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் சர்க்கார்பதி நீர் மின்நிலையத்தில் உள்ள கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி மற்றும் ஆழியார் அணைகளுக்கு செல்கிறது.  இதில், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு பரம்பிக்குளத்திலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தூணக்கடவு அணைக்கு வினாடிக்கு சுமார் 500கன அடி முதல் 700கன அடிவரை இருந்தது. மேலும், மழை தொடர்ந்து பெய்ததால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக, தூணக்கடவு அணையின் நீர்மட்டம் தற்போது 20.50அடியை எட்டியுள்ளது, என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்