SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக நிர்வாகி மாயம் நடிகை ராதா மீது போலீசில் புகார்

2016-08-15@ 00:32:16

சென்னை:சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனி 8வது தெருவை சேர்ந்த உமாதேவி என்பவர் கடந்த 11ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அதில், கோடம்பாக்கம் வட்ட அதிமுக துணை செயலாளராக உள்ள என் கணவர் முனிவேல் சில மாதங்களாக “சுந்தரா டிராவல்ஸ்” படத்தின் கதாநாயகி ராதாவுடன் நெருக்கமாக இருந்தார். அவரை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்று பார்த்த போது முனிவேலை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உமாதேவி, கடந்த 12ம் தேதி தி.நகர் துணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர், இந்த வழக்கை விசாரிக்க கோடம்பாக்கம் போலீசாருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இதுதொடர்பாக, உமாதேவி கூறியதாவது:  என் கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், என் புகாரின்படி போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. என் கணவர் எங்கு இருக்கிறார். என்ன ஆனார் என்று கூட தெரியாமல் நான் மிகவும் வேதனையில் இருக்கிறேன். எனக்கு நடிகை ராதா மேல்தான் சந்தேகமாக உள்ளது. ஏன் என்றால் ராதா எனக்கு போன் செய்து என்னையும், என் குழந்தைகளையும் கணவருடன் சேர்ந்து வாழ விட மாட்டேன் என்று மிரட்டல் விடுத்தார். அதன்படி என் கணவரை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை. போலீசாரும் விசாரணை நடத்துவதில் காலம் தாழ்த்துவது ஏன் என்று தெரியவில்லை. நடிகை ராதாவால் என் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே போலீசார் காணாமல் போன என் கணவரை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

sinemet megaedd.com sinemet
abortion pill procedures late term abortion pill having an abortion

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்