SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆகம விதி மீறல் தடுக்க கருத்து கேட்பு கூட்டம்
2012-08-20@ 01:08:21

சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரகாரத்தில் ஆரம்ப காலத்தில் பதிக்கப்பட்டிருந்த கருங்கற்களுக்கு பதிலாக புதிதாக கருப்பு கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் வெப்பம் தாங்க முடியாமல் பிரகாரத்தை சுற்றி வர மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல சிறிதளவு தண்ணீர் இருந்தாலும் வழுக்கி விழ வேண்டிய நிலை உள்ளது. இது தவிர பிரகாரத்திலிருந்து பார்த்தால் கோபுரம் தெரியாத அளவுக்கு மறைக்கும் வகையில் ஷெட் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே கிழக்கு கோபுரத்தின் முன்பாக இரு பக்கமும் ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிது தொலைவிலிருந்து பார்த்தாலும் கோபுரம் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கோயிலின் உட்பக்கமும் ஷெட் அமைப்பதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஆகம விதிகளை மீறி நடக்கும் பணிகளை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள், கையெழுத்து இயக்கம், தெருமுனை பிரசாரம் நடத்தப்பட்டன. சில அமைப்புகள் கோர்ட்டிலும் முறையிட்டுள்ளன.

இந்நிலையில் கோயிலில் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறுத்தக்கோரி, கருத்து கேட்பு கூட்டம் திருவல்லிக்கேணியில் நேற்று நடந்தது. திருவல்லிக்கேணி குடியிருப்போர் நல சங்கங்கள், நண்பர்கள் குழு, ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் நற்பணி சங்கம், திருவல்லிக்கேணி பிராமணர்கள் நல சங்கம், யாதவ சபை, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பிலான பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு வக்கீல் சம்பத்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆகம விதி மீறி நடக்கும் பணிகளை நிறுத்த வலியுறுத்துவது, பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி, வரும் 25ம் தேதி கண்டன பேரணி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

sms spy app read spy apps free

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

 • baloon111

  பலூனை தட்டி விளையாடுபவர்களுக்கான உலகக் கோப்பை டோர்னமென்ட்: ஸ்பெயினில் வினோதம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்