காஷ்மீரில் மாணவிகள் இசைக்குழு கலைப்ப
2013-02-05@ 02:17:49

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பள்ளி மாணவிகள் தொடங்கிய இசைக்குழுவை மூடும்படி முஸ்லிம் மதகுரு உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து இசைக்குழுவை மாணவிகள் கலைத்துவிட்டனர். காஷ்மீரில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் சேர்ந்து இசைக்குழு ஒன்றை தொடங்கினர். அதில், நோமா நசீர், ஃபாரா, அனீகா காலித் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இசைக்குழுவுக்கு ''பிரகாஷ்''(முதல் ஒளி) என்று பெயரிடப்பட்டனர். கடந்த டிசம்பரில் அவர்கள் முதல் போட்டியில் கலந்து கொண்டனர். அந்த போட்டியிலேயே அவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது.
முஸ்லிம் பெண்கள் இப்படி மேடையேறி பாடுவது இஸ்லாம் மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கூறி அவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், முஸ்லிம் மத குரு முப்தி பஷீருதீன் அகமது பிறப்பித்த பத்வா உத்தரவில் இஸ்லாம் விரோத செயலில் ஈடுபட்டு வரும் மாணவிகள் தங்கள் இசைக்குழுவை உடனடியாக கலைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, இசைக்குழுவை கலைக்க 3 மாணவிகளும் நேற்று முடிவு செய்தனர். இது பற்றி காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில்,''மாணவிகளின் இசைக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்துவதா வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அவர்கள்தான்'' என்றார்.
மேலும் செய்திகள்
கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்: கட்டாய மதம் மாற்றம் செய்தால் 3 ஆண்டு சிறை
நிலக்கரி ஊழல் விவகாரம் மம்தா மருமகன், மனைவிக்கு சுப்ரீம் கோர்ட் ‘செக்’: டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசை சரத்பவார் கட்சி பலவீனப்படுத்துகிறது: மாநில காங். தலைவர் குற்றச்சாட்டு
ஜமைக்காவில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு
தாடி - மீசை குறித்து சர்ச்சை கருத்து : காமெடி நடிகை மீது வழக்கு
உ.பி வெற்றியை தொடர்ந்து இரவு விருந்து 52 அமைச்சர்களுக்கு ‘வகுப்பு’ எடுத்த மோடி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!