வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியது சென்னை ஐகோர்ட்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி பெருமிதம
2012-09-01@ 23:47:12

சென்னை: சமூக அமைதியை கெடுத்துவரும் சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார். கடந்த 1975ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றங்களின் நீதிபதிகளாகவும், மூத்த வக்கீல்களாகவும் உள்ளவர்களின் அமைப்பான செலக்ட் 75 சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது விழா நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், இப்ராஹிம் கலிபுல்லா, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.முருகேசன், நீதிபதிகள் ஜோதிமணி, சித்ரா வெங்கட்ராம், நாகமுத்து, மூத்த வக்கீல்கள் கே.பராசரன், கே.கே.வேணுகோபால், நாகேஷ்வரராவ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நீதிபதி சதாசிவம் பேசியதாவது: சென்னை உயர் நீதிமன்றம் இந்திய நீதிமன்றங்களில் மிகவும் சிறப்பான அந்தஸ்தை பெற்றுள்ளது. லண்டன் நீதிமன்றங்களுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகவும் அதிக கட்டிடங்களை கொண்ட நீதிமன்றமாக சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது.
உயர் நீதிமன்ற வளாகத்திலேயே மாவட்ட நீதிமன்றங்கள் உள்ள ஒரே உயர் நீதிமன்றம் இதுதான். இந்திய அளவில் அதிக எண்ணிக்கையிலான வழக்கு களை விசாரித்து தீர்ப்பளித்து நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்துள்ள நீதிமன்றமும் சென்னை உயர் நீதிமன்றம்தான். மாலை நேர நீதிமன்றங்களை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி அதன்மூலம் ஆயிரக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. 2005ல் சமரச தீர்வு மையம் நாட்டிலேயே முதன்முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் உருவாக்கப்பட்டது. இங்குள்ள சம ரச தீர்வாளர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள சமரச மையங்களுக்கு சென்று வழக்குகளை தீர்ப்பது குறித்து பயிற்சி அளித்துள்ளனர்.
முக்கிய தீர்ப்பு
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரக்கூடிய வகையிலான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத் தில் நடத்தப்பட்டுள்ளன. சம்பாக்கம் துரை ராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப் பின் அடிப்படையில்தான் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் இடஒதுக்கீடு முறையே கொண்டு வரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் தொடரப்பட்ட அப்பீல் தள்ளுபடி செய்யப்பட் டது. அதன்பிறகே அரசியலமைப்பில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது.
50% இடஒதுக்கீடு
இதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில்தான் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறை 50 சதவீதமாக்கப்பட்டது. இந்திய அரசியமைப்பு சட்டத்தில் 76வது பிரிவில் திருத்தம் செய்ய இந்த தீர்ப்பே காரணமாக அமைந்தது.
குவாரி உரிமம்
குவாரிகள் உரிமம் தொடர்பான விதிமுறை யில் உரிமத்தின் காலம் 10 ஆண்டுகள் என்று வரையறுத்ததும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில்தான். குழந்தை தொழிலாளர் மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டுவருவதற்கான உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம்தான் பிறப்பித்தது. நாட்டு மக்களுக்கு அரசுகளின் செயல்பாடுகள் குறித்து தகவல் தெரிவிப்பதற்காகத்தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு பணிகள் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்ற நோக்கமே இதற்கு காரணம். இந்த சட்டத்தின்கீழ் தகவல் பெற்று தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அசாம் மாநிலத்தில் ஏழை மக்களுக்கு பொது வினியோக திட்டத்தின்கீழ் உணவுப் பொருட்கள் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்ததையும் மறந்துவிடக்கூடாது. தகவல் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதே நேரத்தில் சைபர் குற்றங்களும் அதிகரித்துவிட்டன. உலகின் பயங்கரவாத அமைப்புகள் இன்டர்நெட் போன்ற தகவல் தொழில்நுட்பங்களைத்தான் முக்கிய ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இதுபோன்ற குற்றங்களை தடுத்து தனிமனித உரிமையையும் தேசிய பாதுகாப்பையும் பலப்படுத்த நீதித்துறை முன்வர வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் இந்த பணிகளை செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு சதாசிவம் பேசினார்.
மேலும் செய்திகள்
நீதிபதிகள் மகிழும் வகையில் அறநிலையத்துறை பணிகள் கூடுதல் வேகம் பெறும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி
தமிழக முதல்வர் பங்கேற்கும் அரசு விழாக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பணி : வெளியானது முக்கிய அறிவிப்பு!!
திருவள்ளூர் அருகே அதிமுக ஆட்சியில் ஆக்கிரமிப்பு செய்த ஏரியை மீட்டுத்தரக் கோரி விவசாயிகள் கோரிக்கை
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி; குடும்பத்தினருக்கு ஆறுதல்..!!
வணிக முத்திரையின்றி பொட்டலத்தில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்புக்கு ஜி.எஸ்.டி. விதிப்பது கவலை அளிக்கிறது: பாமக தலைவர் அன்புமணி எதிர்ப்பு..!!
போஸ்டர் யுத்தத்தில் குதித்த சசிகலா ஆதரவாளர்கள்... விஸ்வரூபம் எடுக்கும் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம்
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!