SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

22ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம

2012-06-07@ 00:51:14

சென்னை: பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 22ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்தார். சென்னையில் நேற்று, பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: கிறிஸ்தவர், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. கடந்த ஆண்டு தமிழகத்துக்கு ரூ.58 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த கல்வி உதவித் தொகையை ஏழை இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி ஜூலையில் போராட்டம் நடைபெறும்.
பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் தமிழக பாஜ சார்பில் வரும் 22ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் கே.பி.என்.சீனிவாசனை ஆதரிக்கிறோம். சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி டாக்டரை தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். தேர்தல் ஆணையரை நியமிக்க குழு வேண்டும் என்று அத்வானி கூறிய கருத்தை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளதை பாராட்டுகிறேன், என்றார்.

amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்