30 குண்டுகள் முழங்க வாணிஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை
2023-02-06@ 00:52:25

சென்னை: பாடகி வாணி ஜெயராம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவில், வாணிஜெயராமின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. படுக்கைக்கு அருகில் இருந்த 2 அடி உயர மேஜை மீது அவர் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், நெற்றியிலும் மற்றும் மேஜையின் விளிம்பிலும் ரத்தக்கறைகள் இருந்தது என்றும் தடயவியல் நிபுணர் சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
வாணி ஜெயராம் இறந்த நேரத்தில் அவரது வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை எடுத்து பார்த்த போது, அவர் இறப்பதற்கு முன்பும் இறந்த பின்னரும் அவரது வீட்டிற்கு யாரும் வந்து சென்றதாக எந்த சிசிடிவி பதிவுகளும் இல்லை. எனவே, தடயவியல் துறை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையின் அடிப்படையில், பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று முதற்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு மாநகர காவல்துறை தடயவியல் துறை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளின் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இதையடுத்து வாணி ஜெயராம் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. சமீபத்தில் ஒன்றிய அரசு சார்பில் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாணி ஜெயராம் உயிரிழந்துள்ளார். 3 தேசிய விருதுகள் மற்றும் பல மாநில அரசுகளின் விருதுகள் பெற்றுள்ள வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறை மரியாதையுடன் நேற்று வாணி ெஜயராம் இறுதிச்சடங்கு நடந்தது.
மேலும் செய்திகள்
மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுநர்களுக்கு பணியிட ஆணைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!
போலி செய்திகள் மற்றும் வெறுப்பு செய்திகளை கண்டறிய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!
நெல்லையில் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் விசாரணைக்கு ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்.!
அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கி 31 கோடியை சத்யா ஸ்டுடியோவிடமிருந்து வசூலிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு ஜூன் 28ல் குடமுழுக்கு: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
தருமபுரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!