உறை பனி கொட்டிய போதிலும் உறை பனி கொட்டிய போதிலும் ரோஜா பூங்காவில் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
2023-01-29@ 12:20:13

ஊட்டி: ஊட்டியில் உறை பனி கொட்டிய போதிலும் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருந்த போதிலும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால், இச்சமயங்களில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு இங்குள்ள பூங்காக்கள் தயார் செய்யப்படும். குறிப்பாக, தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.
மேலும், மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள். அதேபோல், ரோஜா பூங்காவிலும் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், தற்போது கோடை சீசனுக்காக பூங்காக்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால், தாவரவியல் பூங்காவில் மலர்கள் இன்றி காணப்படுகிறது. ஊட்டி ரோஜா பூங்காவில் பொதுவாக உறை பனி விழும் சமயத்தில் மலர்கள் அனைத்தும் உதிர்ந்துவிடும். இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவார்கள். ஆனால், இம்முறை உறை பனி விழுந்த போதிலும், ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் ரோஜா மலர்கள் பூத்துக் காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.
மேலும் செய்திகள்
குமரியில் வெள்ளை திராட்சை விற்பனை : ஆர்வமுடன் வாங்கி செல்லும் மக்கள்
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நாளை ஆழித்தேரோட்டம்: இன்றிரவு அஜபா நடனத்துடன் தேருக்கு எழுந்தருளும் சுவாமி
சங்கரன்கோவிலில் 2 ரூபாய்க்கு இட்லி வடை விற்கும் தம்பதி
5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு: அதிமுக ஆட்சியில் அம்மா சிமென்ட் விற்பனையில் முறைகேடு நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
கோவை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கோடைக்கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
2ம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்பட்டது: ஐகோர்ட் கிளை ஆணை
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!