SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக நடத்தக்கூடாது: போப் பிரான்சிஸ் கருத்து

2023-01-26@ 00:03:08

வாடிகன் சிட்டி: ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகள் போல்   நடத்தக்கூடாது என்று என்று போப் பிரான்சிஸ் கூறினார். போப் பிரான்சிஸ் செய்தி நிறுவனம் ஒன்றுககு அளித்த பேட்டியில்,‘‘ உலகின் சில நாடுகளில் உள்ள கத்தோலிக்க பிஷப்கள் ஓரின சேர்க்கையாளர்களை  தண்டிக்கும் அல்லது துன்புறுத்தும் சட்டங்களை ஆதரிக்கின்றனர்.இது போன்று செயல்கள் பாவம் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். ஓரின சேர்க்கையாளர்கள் உட்பட  அனைவரின் கண்ணியத்தை காப்பாற்றுவதில் பிஷப்கள் தங்கள் மனநிலையை மாற்றி கொள்ள வேண்டியது அவசியம். கடவுள்  அனைவரையும் தனது குழந்தையாகவே கருதுகிறார்.

எனவே, ஓரின சேர்க்கையில் ஈடுபடும் நபர்களை  சர்ச்சுக்குள் வருவதை  பிஷப்கள் வரவேற்க வேண்டும். அவர்களை குற்றவாளிகள் போல் நடத்தக்கூடாது, பாரபட்சம் காட்டக்கூடாது’’ என்றார்.  மனித கவுரவ அறக்கட்டளை என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் உள்ள 67 நாடுகள் ஓரே பாலினத்தவர்கள் திருமணம் செய்வதற்கு தடை விதித்துள்ளன. இதில் 11 நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு  மரண தண்டனை கூட விதிக்கப்படுகிறது. அமெரிக்காவில்  12க்கும் மேற்பட்ட மாகாணங்களில்   ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் இன்னும் அமலில் உள்ளன என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்