SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2022ம் ஆண்டின் ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராக சூர்யாகுமார் யாதவ் தேர்வு!

2023-01-25@ 17:13:49

மும்பை: 2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதை இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தட்டி சென்றார். டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யாகுமார் யாதவ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் சூர்யாகுமார் யாதவ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி மற்றும் சூர்யாகுமார் யாதவ் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை அரையிறுதி வரை அழைத்துச்சென்றனர்.

மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 45 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இலங்கை அணியுடனான தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

பின்னர் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 2 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் சர்வதேச அளவில் அதிவேகமாக 100 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். அடுத்து நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் சூர்யாகுமார் யாதவ் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2022ம் ஆண்டின் ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராக சூர்யாகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்