SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் விக்டோரியா அசரென்கா: ரைபாகினா முன்னேற்றம்

2023-01-25@ 01:03:59

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் விளையாட, பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரென்கா தகுதி பெற்றார். காலிறுதியில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் (28 வயது, 3வது ரேங்க்) நேற்று மோதிய முன்னாள் நம்பர் 1 வீராங்கனை அசரென்கா (33 வயது, 24வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன், அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி ஜெஸ்ஸிகாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த அவர் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 37 நிமிடத்துக்கு நீடித்தது.

2013 ஆஸி. ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற அசரென்கா, அதன் பிறகு இந்த தொடரில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் எலனா ரைபாகினா (23 வயது, 25வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் லாத்வியா வீராங்கனை யெலனா ஓஸ்டபென்கோவை (25 வயது, 17வது ரேங்க்) வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 19 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செக் குடியரசின் ஜிரி லெஹக்காவுடன் (21 வயது, 71வது ரேங்க்) மோதிய கிரீஸ் நட்சத்திரம் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் (24 வயது, 4வது ரேங்க்) 6-3, 7-6 (7-2), 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ரஷ்யாவின் கரென் கச்சனோவுடன் (26 வயது, 20வது ரேங்க்) மோதிய அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டா (22 வயது, 31வது ரேங்க்) 6-7 (5-7), 3-6, 0-3 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் காயம் காரணமாக வெளியேறியதை அடுத்து கச்சனோவ் அரையிறுதிகு தகுதி பெற்றார். கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் சானியா மிர்சா - ரோகன் போபண்ணாவுடன் மோதுவதாக இருந்த ஓஸ்டபென்கோ (லாத்வியா) - டேவிட் ஹெர்னாண்டஸ் (ஸ்பெயின்) ஜோடி காயத்தால் விலகியதை அடுத்து இந்திய ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்