குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படம் பற்றி தெரியாது: அமெரிக்கா அதிரடி
2023-01-25@ 01:01:15

வாஷிங்டன்: குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் குறித்து தெரியாது என்று அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் ஊடகமான பிபிசி ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பில் ஆவணப்படம் எடுத்துள்ளது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
2002 குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தோடு அப்போதைய முதல்வராக இருந்த பிரதமர் மோடி தொடர்புபடுத்தப்பட்டுள்ளார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. சமூக வலைதளங்களில் இந்த படத்தை வெளியிடுவதற்கும் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த நிரூபர் பிபிசி ஆவணப்படம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நெட் பிரைஸ், “நீங்கள் கூறும் குஜராத் கலவரம் குறித்த பிபிசியின் ஆவணப்படம் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இரண்டு செழிப்பான, துடிப்பான ஜனநாயக நாடுகளான அமெரிக்கா-இந்தியாவை இணைக்கும் மதிப்புக்களை நான் அறிந்திருக்கிறேன். இந்தியாவுடனான வாஷிங்டனின் உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்தும் பல்வேறு கூறுகள் உள்ளன. நெருங்கிய அரசியல் உறவுகள் உள்ளன. பொருளாதார உறவுகள் உள்ளன. மிகச்சிறப்பாக இருநாட்டு மக்களிடையே ஆழமான உறவு உள்ளது”என்றார்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம்!!
உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார்!!
அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 9 பேர் பரிதாப பலி
ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்: மேலும் 3 பேர் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!