SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜன.29-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும்: துரைமுருகன் அறிவிப்பு..!

2023-01-24@ 21:44:01

சென்னை; திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 29-1-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கூட்டத்தில் ஒன்றிய அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. வருகிற 31ம் தேதி, வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இந்நிலையில் ஜன.29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்