2 பில்லியன் வசூலை கடந்தது அவதார் 2: இந்தியாவில் ரூ.370 கோடி
2023-01-24@ 00:32:14

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலகம் முழுவதும் அவதார் 2 படம் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 2009ம் ஆண்டில் அவதார் படம் திரைக்கு வந்தது. இந்த படம் உலக அளவில் பெரும் வசூலை குவித்து, அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்தது. இதையடுத்து அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், அதையடுத்து ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படங்கள் அதிக வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 16ம் தேதி திரைக்கு வந்தது.
இந்த படம் உலகம் முழுவதும் 2 பில்லியன் வசூலை குவித்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 572 மில்லியன் வசூலித்திருக்கிறது. அமெரிக்கா தவிர மற்ற உலக நாடுகளில் 1.35 பில்லியன் வரை வசூலித்து சாதித்துள்ளது. இந்த படம் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தின் உலக அளவிலான வசூலை தாண்டியிருக்கிறது. இதன் மூலம் அவேஞ்சர்ஸ் வசூலையும் நெருங்கியுள்ளது. இந்தியாவில் இப்படம் ரூ.370 கோடியை ஈட்டியிருக்கிறது.
இந்தியாவில் சாதித்த ஹாலிவுட் படங்களிலே இந்த படம்தான் அதிகமாக வசூலித்திருக்கிறது. அவதார் 2 படம் வெற்றி பெற்றால்தான் அவதார் 3 மற்றும் 4 பாகங்களை எடுப்பேன் என இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். இப்போது படம் பெரிய வெற்றியை தக்க வைத்திருக்கிறது. இதனால் 3வது மற்றும் 4வது பாகத்தை உருவாக்கும் பணியில் ஜேம்ஸ் கேமரூன் ஈடுபட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
சிறந்த கலை சேவைக்காக இந்திய வம்சாவளி நடிகைக்கு தேசிய மனிதநேய விருது: அமெரிக்க அதிபர் வழங்கினார்
உக்ரைனுக்கு 16 பில்லியன் டாலர்கள் நிதியுதவி, பீரங்கிகளை வழங்கிய மேற்கு உலக நாடுகளுக்கு ரஷ்யா, சீனா கூட்டாக கண்டனம்!!
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 11 பேர் பலி.. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு!!
சீனாவிடம் கடன் வாங்குவதில் வங்கதேசம் கவனமாக உள்ளது: ஷேக் ஹசீனா தகவல்
தீவிரவாத வழக்குகள் உள்பட இம்ரான் கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன்: லாகூர் உயர்நீதிமன்றம் வழங்கியது
மோடி கொடுத்த பரிசு பற்றி கணக்கு காட்டவில்லை: டிரம்ப் மீது குற்றச்சாட்டு
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!