பிரதமர் மோடிக்கு எதிரான பிபிசியின் ஆவணப்படம் குறித்து சுதந்திரமான விசாரணை தேவை: ஆன்லைன் மூலம் புகார் மனு
2023-01-24@ 00:17:17

லண்டன்: பிரதமர் மோடி குறித்து சர்ச்சைகுரிய ஆவணப்படம் தொடர்பாக பிபிசியின் விதிமீறல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆன்லைன் மூலமாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஊடகமான பிபிசியானது இந்தியா: மோடிக்கான கேள்விகள் என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளது. இதன் முதல் பாகம் கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்டது. இந்த ஆவணப்படம் குஜராத் முதல்வராக பிரதமர் மோடி இருந்தபோது கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த படம் ஒளிபரப்பான பின்னர் கடும் சர்ச்சை எழுந்தது. இந்தியாவில் சமூக ஊடக தளங்களில் இந்த ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. மேலும் முன்னாள் நீதிபதிகள், அரசு உயரதிகாரிகள் என பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய ஆவணப்படம் தயாரிப்பில் பிபிசி தனது கடமைகளில் இருந்து விதிமீறல் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆன்லைன் மூலமாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பலர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த புகார் மனுவில், ‘‘பிபிசி தயாரித்துள்ள குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படம் தனது பார்வையாளர்களுக்கு வேண்டுமென்றே தவறான தகவல்களை தெரிவிக்கும் மோசமான பிரசாரத்தின் ஒரு பகுதியாகும்.
ஆவணப்படத்தின் கருத்துரையில் பாரபட்சமற்ற தன்மையின் மிக உயர்ந்த தரத்தை பூர்த்தி செய்வதற்கு தவறியதற்காக பிபிசியை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். கடுமையான விதிமீறல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தவும், அது குறித்த விவரங்களை வெளியிடவேண்டும் என்று பிபிசி வாரியத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.30 கோடியாக அதிகரிப்பு
போர் கப்பல் விரட்டியடிப்பு சீனாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு.
இந்திய தூதரக தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்: இங்கி. வெளியுறவு அமைச்சர் பேச்சு
தவறாக வழி நடத்திவிட்டேன் மீண்டும் மன்னிப்பு கோரினார் ஜான்சன்
18 குழந்தைகள் பலி உபி மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் ரத்து
அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் அறிக்கை
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!