ஆஸி. ஓபன் டென்னிஸ் சபலென்கா, டோனா முன்னேற்றம்: இன்று முதல் காலிறுதி
2023-01-24@ 00:07:36

மெல்போர்ன்: ஆஸ்திேரலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளன. மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதில் பெலாரஸ் வீராங்கைன அரினா சபலென்கா(5வது ரேங்க்), சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக்(10வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் ஒரு மணி 27 நிமிடங்களில் சபலென்கா 7-6, 6-2 என நேர் செட்களில் வென்றார்.
அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் போலாந்து வீராங்கனை மேக்தா லினெட்(45வது ரேங்க்) 2-0 என நேர் செட்களில் ஒரு மணி 57நிமிடங்கள் போராடி பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா(4வது ரேங்க்)வை வீழ்த்தினார்.சபலென்கா, லினெட் ஆகியோரை போன்று கரோலினா பிளிஸ்கோவா(செக் குடியரசு) டோனா வேகிக்(குரோஷியா) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினர்.
இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் எலனா ரைபாகினா(கஜகிஸ்தான்)-யெலனா ஆஸ்டபென்கோ(லாத்வியா), ஜெசிகா பெகுலா(அமெரிக்கா)-விக்டோரியா அசரென்கா(பெலாரஸ்) ஆகியோர் மோத உள்ளனர். கூடவே மற்ற 2 காலிறுதி ஆட்டங்களில் பிளிஸ்கோவா-லினெட், சபலென்கா-டோனா ஆகியோர் களம் காண உள்ளனர்.
* காலிறுதியில் இந்திய இணை
கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்றில் இந்திய ஆட்டக்காரர்கள் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா இணை, நேற்று மகோடா நினேமியா(ஜப்பான்), ஏரியல் பெஹர்(உருகுவே) இணையுடன் மோதியது. ஒரு மணி 17 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் 6-4, 7-6(11-9) என்ற கணக்கில் அசத்தல் வெற்றியை பெற்ற இந்திய இணை காலிறுதிக்கு முன்னேறியது.
மேலும் செய்திகள்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் போட்டிகளை கொழும்பில் நடத்த திட்டமா?
சூர்யகுமார் யாதவ்க்கு மேலும் வாய்ப்புகள் வழங்க வேண்டும்: இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து
எலிமினேட்டரில் இன்று மும்பை - வாரியர்ஸ் மோதல்: பைனல் வாய்ப்பு யாருக்கு
2வது சுற்றில் பியான்கா
சில்லி பாயிண்ட்ஸ்
சிந்து, பிரணாய் முன்னேற்றம்: சுவிஸ் ஓபன் பேட்மின்டன்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!