ஆஸ்திரேலிய ஓபனில் பெலாரஸ் வீராங்கனைகள் அசத்தல் ஆட்டம்: சுவிஸ் வீராங்கனை பென்சிக்கின் சவாலை முறியடித்தார் செபலன்கா
2023-01-23@ 14:15:38

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்யில் சுவிஸ் வீராங்கனை பென்சிக்கின் சவாலை முறியடித்து. காலிறுதி கோதாவுக்கு தயாராகியுள்ளார் பெலாரஸ் நாட்டின் இளம் வீராங்கனை செபலன்கா மெல்பனில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி காலிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மகளிர் பிரிவில் சுவிஸ் நாட்டின் பெலிண்டா பென்சிக் மற்றும் பெலாரஸின் அரினா சபலெங்கா இடையில் ஆன மோதல் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது.
அதனை உறுதிசெய்யும் விதமாக முதல் செட் 7 வது கேம் வரை சென்றது. முடிவில் 7 - 5 என முதல் செட்டை கைப்பற்றிய செபலன்கா அடுத்த செட்டை 6 - 2 என எளிதில் வசப்படுத்தி வெற்றியை சுவைத்தார். ஆஸ்திரேலிய ஒபெனில் செபலன்கா காலிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை. அடுத்து கிரவேசியாவின் ஜோனா வேகிக்குடன் இவர் மோத உள்ளார்.
மற்றொரு முக்கிய ஆட்டத்தில் லூ குயாங் சூவை போரடி வீழ்த்தி விக்ட்டோரியா அசரென்கா காலிறுதி கோதாவுக்கு தயாராகி உள்ளார். இவர் 4-6, 6-1, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஆர்பரித்தார். முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான அசரென்கா 7 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓப்பனில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 2012, 2013ம் ஆண்டுகளில் இவரே ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றினர்.
Tags:
ஆஸ்திரேலிய ஓபன் பெலாரஸ் வீராங்கனைகள் அசத்தல் ஆட்டம் சுவிஸ் வீராங்கனை பென்சிக்கின் சவாலை முறியடித்தார் செபலன்காமேலும் செய்திகள்
இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 270 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆட இந்திய அணி பாகிஸ்தான் வர அனுமதி கொடுங்கள்: மோடிக்கு அப்ரிடி கோரிக்கை
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டியை காண குவித்த ரசிகர்கள்!
நவ. 5ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி?
மகளிர் பிரிமியர் லீக்: முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேபிட்டல்ஸ்!!
சில்லி பாயின்ட்...
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!