இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை கடந்த டிசம்பரில் ஏற்றுமதி செய்து ஆப்பிள் நிறுவனம் சாதனை
2023-01-23@ 13:03:44

டெல்லி: ஐபோன் மீது எப்போதுமே இந்தியர்களுக்கு ஒரு மோகம் இருக்கும். விலை அதிகமாக இருந்தாலும் அதன் லுக், தரம், பயன்பாடு, அம்சங்கள் என பல்வேறு விஷயங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம்தான் ஐபோன்களைத் தயாரித்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரூ.8,100 கோடி மதிப்புள்ள ஐபோன்களை கடந்த டிசம்பரில் ஏற்றுமதி செய்து ஆப்பிள் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் பயன்பாடு உலகம் முழுவதும் விரிவடைந்துள்ளது. டிசம்பரில் இந்தியாவிலிருந்து சாதனை அளவாக ரூ.10,000 கோடிக்கு மேல் செல்போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஃபாக்ஸ்கான், விஸ்டரான், பெகட்ரான் ஆகியவை ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐபோன்களை தயாரித்து வழங்கி வருகிறது. இந்தியாவில் ஒரே மாதத்தில் ரூ.8,100 கோடி செல்போன்களை ஏற்றுமதி செய்யும் முதல் நிறுவனம் என்ற சாதனை படைத்துள்ளது. தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தன் செல்போன்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இதுவரை செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் இருந்து வந்த சாம்சங் நிறுவனத்தை நவம்பரில் பின்னுக்கு ஆப்பிள் நிறுவனம் தள்ளியது. 2022 டிசம்பரில் 1 பில்லியன் டாலர் ரூ.8,100 கோடி என்ற இலக்கை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஏற்றுமதி கடந்துள்ளது. ஆப்பிள் ஏற்றுமதி செய்த செல்போன்களில் ஐபோன் 12,13,14 மற்றும் 14+ ஆகிய மாடல்கள் அடங்கும். 2027 -ம் ஆண்டு உலக அளவில் பயன்படுத்தப்படும் ஆப்பிள் ஐபோன்களில் இரண்டில் ஒன்றை இந்தியா தயாரித்திருக்கும் என்று கூறியது. அதேபோல் 2025 -ம் ஆண்டில் உலக அளவில் மொத்தமுள்ள ஆப்பிள் ஐபோன்களில் 25 சதவீதத்தை இந்தியா தயாரித்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியாவில் 2025க்குள் காசநோயை முழுவதுமாக ஒழிப்பதே நமது குறிக்கோள்: காசநோய் ஒழிப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது: உச்ச நீதிமன்றத்தில் 14 எதிர்க்கட்சிகள் மனு தாக்கல்!
அதானி குழுமத்தை தொடர்ந்து ஜேக் டோர்சி மீது ஹிண்டன்பர்க் புகார்: ரூ.8,200 கோடி அளவுக்கு முறைகேடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு..!!
இலங்கை சிறையில் உள்ள புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை விடுவிக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு..!!
புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும்; தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி பெறுவோம்: முதல்வர் ரங்கசாமி உறுதி
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு: காங்கிரஸ் அறிவிப்பு!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!