உலக கோப்பை ஹாக்கி காலிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து: பெனால்டி ஷூட்டில் சொதப்பியது இந்தியா
2023-01-23@ 01:00:22

புவனேஸ்வர்,: உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் கிராஸ்ஓவரில் நியூசிலாந்துடன் மோதிய இந்தியா பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்று காலிறுதி வாய்ப்பை நழுவவிட்டது. புவனேஸ்வரில் நேற்று நடந்த இப்போட்டியில், காலிறுதிக்கு முன்னேற வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது இந்தியா. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப துடிப்புடன் விளையாடி நியூசிலாந்து கோல் பகுதியை முற்றுகையிட்ட இந்திய அணி, 17வது நிமிடத்தில் லலித் குமார் அபாரமாக பீல்டு கோல் அடிக்க 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்து 24வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் சுக்ஜீத் சிங் கோல் அடிக்க 2-0 என முன்னிலை அதிகரித்தது.
பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய நியூசிலாந்து அணிக்கு 28வது நிமிடத்தில் லேன் சாம் கோல் போட்டு கணக்கை தொடங்கினார். உத்வேகத்துடன் விளையாடிய இந்தியாவுக்கு 40வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் வருண் குமார் கோல் அடித்து 3-1 என முன்னிலை கொடுத்தார். வெற்றி நிச்சயம் என்ற நினைப்பில் இந்திய வீரர்கள் சற்று அசட்டையாக இருந்ததை பயன்படுத்தி ரஸ்ஸல் கேன் (43வது நிமிடம்), பிண்ட்லே ஷான் (49வது நிமிடம்) இருவரும் பெனால்டி கார்னரில் கோல் அடிக்க நியூசிலாந்து 3-3 என சமநிலை ஏற்படுத்தியது.
ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்ததை அடுத்து பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் அதிலும் 3-3 என சமநிலை நீடித்ததால் மீண்டும் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. இறுதியில் நியூசிலாந்து 5-4 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேற... இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது.
மேலும் செய்திகள்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் போட்டிகளை கொழும்பில் நடத்த திட்டமா?
சூர்யகுமார் யாதவ்க்கு மேலும் வாய்ப்புகள் வழங்க வேண்டும்: இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து
எலிமினேட்டரில் இன்று மும்பை - வாரியர்ஸ் மோதல்: பைனல் வாய்ப்பு யாருக்கு
2வது சுற்றில் பியான்கா
சில்லி பாயிண்ட்ஸ்
சிந்து, பிரணாய் முன்னேற்றம்: சுவிஸ் ஓபன் பேட்மின்டன்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!