SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி அருகே கூத்தைப்பாரில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலம்: 800 காளைகள் சீறிப் பாய்ந்தன

2023-01-22@ 15:10:40

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் இன்று ஜல்லிக்கட்டு ேபாட்டி  நடந்தது. இதற்காக ஊர் திடலில் வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் பார்வையிடும் வகையில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. திருச்சி மாவட்டம் மட்டுமின்றி புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன.  கால்நடை துறை துணை இயக்குனர் மருதைராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர், கால்நடைகளுக்கு பரிசோதனை செய்தனர். அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

இதன்பிறகு 800 காளைகள், 420 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 7.45 மணிக்கு வீரர்கள் உறுதிமொழி ஏற்க, ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்டிஓ தவச்செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை போட்டிபோட்டு வீரர்கள் அடக்கினர். களத்தில் பல காளைகள் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து நின்று விளையாடியது.
களத்தில் காளைகள் முட்டி காயமடைந்த வீரர்களுக்கு அங்கேயே மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், ரொக்கத் தொகை மற்றும் பல பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்