கணியூர் பேரூராட்சியில் குவிந்துகிடக்கும் குப்பையால் துர்நாற்றம்
2023-01-21@ 11:39:07

உடுமலை: கணியூர் பேரூராட்சியின் நுழைவு வாயிலிலேயே மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதன் அருகே பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. மேலும், தினசரி ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. பேரூராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்தெடுக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமலில் இருந்தும் சரிவர கடைபிடிக்கவில்லை. இதனால் குப்பைகளை மக்கள் சாலையோரம் வீசி செல்கின்றனர். இவை முறையாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. பிளாஸ்டிக் கழிவுளை ஆடு, மாடுகள் தின்றுவிடுகின்றன.
இதனால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் அருகே தினசரி காலையில் 6 மணி முதல் 8 மணி வரை காய்கறி ஏலம் நடக்கிறது. 20 கடைகள் உள்ளன. வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் பகுதியில் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுவதால் சிரமப்படுகின்றனர். நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.எனவே, உடனடியாக மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நாளை ஆழித்தேரோட்டம்: இன்றிரவு அஜபா நடனத்துடன் தேருக்கு எழுந்தருளும் சுவாமி
சங்கரன்கோவிலில் 2 ரூபாய்க்கு இட்லி வடை விற்கும் தம்பதி
5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு: அதிமுக ஆட்சியில் அம்மா சிமென்ட் விற்பனையில் முறைகேடு நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
கோவை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கோடைக்கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
2ம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்பட்டது: ஐகோர்ட் கிளை ஆணை
பல் பிடுங்கிய போலீஸ் அதிகாரி விவகாரம்: ஏப்ரல் 10ம் தேதிக்குள் எழுத்து பூர்வமாக சாட்சியம் அளிக்கலாம்.! விசாரணை அதிகாரி தகவல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!