SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கானை மிரட்டும் உறை பனி: கடந்த 9 நாட்களில் 78 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

2023-01-21@ 09:36:17

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும், உறைபனி மற்றும் கடுமையான குளிரால் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 9 நாட்களில் 78 பேர் உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு உள்ளது. குறிப்பாக காபூல் உள்ளிட்ட இதர மாநிலங்களில் வெப்பநிலை கடுமையாக சரிந்துள்ளது. கோர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 28 டிகிரிக்கும் கீழ் பதிவாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் பனிக்கட்டியாக தென்படுகிறது. இந்த உறைபனியில் உறைந்து கடந்த 9 நாட்களில் 78 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் குழந்தைகள், பெண்கள் உள்பட 140 பேர் கார்பன் மோனாக்சைடு பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 9 நாட்களில் 77 ஆயிரம் கால்நடைகளும் உயிரிழந்துள்ளது. இதுகுறித்து ஆப்கான் வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ‘இந்த குளிர்காலம் சமீப காலங்களில் மிகவும் குளிர்ச்சியானது என்றும் இந்த குளிர் அலை மேலும் 1 வாரம் நீடிக்கும்’ என்றும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்