சர்வதேச நிதியத்திடம் கடன் பெற தீவிர முயற்சி; இலங்கைக்கு உதவ இந்தியா தயார்!: வெளியுறவு அமைச்சர் உறுதி
2023-01-20@ 21:16:01

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை சென்றடைந்தார். தலைநகர் கொழும்புவில் அவர் அந்த நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார்.
அப்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியையும், ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பிராந்திய நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, சர்வதேச நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் கடன் பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதற்காக இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் உத்தரவாதத்தை சர்வதேச நிதியம் கேட்டுள்ளது. இந்தியாவுடன் இலங்கை பேசிவரும் நிலையில், ஜெய்சங்கரின் இந்த இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், ‘இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், முதலீடுகளை அதிகரிப்பதற்கும் தேவையான உதவிகளை இந்தியா வழங்கும். உட்கட்டமைப்பு, எரிசக்தி, தொழில், சுகாதாரம் முதலான துறைகளில் முதலீடு குறித்து விவாதிக்கப்பட்டது’ என்று ெதரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம்!!
உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார்!!
அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 9 பேர் பரிதாப பலி
ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்: மேலும் 3 பேர் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!