வீடியோ எடுப்பதற்காக ஓடும் காரில் சீட் பெல்டை கழற்றிய பிரதமர்: தவறை உணர்ந்ததால் மன்னிப்பு கேட்டார்
2023-01-20@ 17:38:29

லண்டன்: ஓடும் காரில் தனது சீட் பெல்ட்டை கழற்றிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இங்கிலாந்து பிரதமரும், இந்திய வம்சாவளியுமான ரிஷி சுனக், நேற்று வடமேற்கு இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்ட போது, வீடியோ ஒன்றை எடுக்க முயன்றார். அப்போது அவர் தனது காரின் சீட் பெல்ட்டைக் கழற்றினார்.
இதுதொடர்பான வீடியோ வெளியானது. பொதுவாக இங்கிலாந்து நாட்டு சட்டத்தின்படி, காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியத் தவறினால், அதே இடத்தில் 100 பவுண்டு (ரூ. 10,000) அபராதம் விதிக்கப்படும். இவ்வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றால் 500 பவுண்டு வரை அபராதம் விதிக்கப்படும். இவ்விவகாரம் குறித்து ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘பிரதமர் காரில் சென்று கொண்டிருந்த போது, தனது சீட் பெல்ட்டை கழற்றியது உண்மை. ஒரு வீடியோ கிளிப்பை எடுப்பதற்காக அவர் சீட் பெல்டை கழற்றினார். இது தவறு என்பதை உணர்ந்ததால், மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். காரில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்’ என்று கூறினார்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம்!!
உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார்!!
அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 9 பேர் பரிதாப பலி
ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்: மேலும் 3 பேர் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!