பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!
2023-01-20@ 12:15:03

பிரான்ஸ்: பிரான்ஸில் அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு திட்டமிட்டுள்ள ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக வெடித்த போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பிரான்சில் தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது 62-ஆக உள்ளது. இதனை 64-ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே அதிபர் இமானுவேல் மேக்ரான் முயற்சித்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் பரிந்துரைத்த திட்டங்களின் படி 2027-ம் ஆண்டு ஒருவர் தனக்குரிய முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்கு 43 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பிரான்ஸ் முழுவதும் நேற்று நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
பாரீஸ் நகரில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் நடனம் ஆடி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பல இடங்களில் போராட்டகாரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் போராட்டம் களம் போர்க்களமாக மாறியது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் கல்லூரி மாண்வர்கள், அரசு பணியாளர்கள் அதிகளவில் பங்கேற்றனர். நாடு முழுவதும் வெடித்தெழுந்த போராட்டத்தால் பிரான்ஸ் நாட்டிற்கு நேற்றைய தினம் கருப்பு வியாழனாகவே மாறியது. இதன் காரணமாக ஓய்வூதிய சீர்திருத்த கொள்கையை நிறுத்தி வைக்க அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம்!!
உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார்!!
அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 9 பேர் பரிதாப பலி
ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்: மேலும் 3 பேர் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!