வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் விற்பனையின்றி தேங்கி கிடக்கும் பன்னீர்கரும்புகள்: வியாபாரிகள் கவலை
2023-01-19@ 20:56:47

வேலூர்: வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பொங்கல் பண்டிக்கைக்கு கொண்டுவரப்பட்ட பன்னீர்கரும்புகள் விற்பனையின்றி தேங்கி கிடப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 15ம்தேதி கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையின்போது கரும்பு, வாழைப்பழம், மஞ்சள்கொத்து, மண்பானை மற்றும் பூ போன்றவற்றை படையல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். கடந்தாண்டு பெய்த மழையினால் கரும்பு, வாழை, மஞ்சள் கொத்து ஆகியவற்றின் விளைச்சலும் அதிகரித்து இருந்தது. குறிப்பாக தென்மாவட்டங்களில் பன்னீர் கரும்பு வகைகள் அதிக பரப்பில் விவசாயிகள் பயிர் செய்து உள்ளனர்.
இந்தாண்டு உற்பத்தியும் அதிகளவில் இருப்பதால் மார்க்கெட்டில் கரும்பு வரத்து அதிகரித்து இருந்து. இதனால் வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு மட்டும் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் பன்னீர்கரும்பு வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வேலூர் கரும்பு வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் பொங்கல் பண்டியைொட்டி வேலூர் மார்க்கெட்டிற்கு கடலூர், சீர்காழி, பூம்புகார், சிதம்பரம், சேலம், பண்ருட்டி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் கரும்பை வாங்கி விற்போம்.
இந்த ஆண்டு 15 முதல் 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ₹400 முதல் ₹500 வரை முதலில் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக விலை குறைந்தது. எப்போதும் கரும்பு விற்பனை களைக்கட்டும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக விற்பனை பாதித்தது. இந்த ஆண்டு விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பொங்கல் பண்டிக்கைக்கு கரும்பு குறைந்து அளவு மட்டுமே விற்பனையானது.
இதனால் வியாபாரிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர். தற்போது குளிர் மற்றும் பனியும் அதிகளவில் இருப்பதால் பலருக்கும் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. கரும்பு சாப்பிடுவதை தவிர்த்துள்ளனர். தேங்கி கிடக்கும் கரும்புகளை வாங்கிய விலையை விட பாதி விலைக்கு வியாபாரம் செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகள்
குமரியில் வெள்ளை திராட்சை விற்பனை : ஆர்வமுடன் வாங்கி செல்லும் மக்கள்
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நாளை ஆழித்தேரோட்டம்: இன்றிரவு அஜபா நடனத்துடன் தேருக்கு எழுந்தருளும் சுவாமி
சங்கரன்கோவிலில் 2 ரூபாய்க்கு இட்லி வடை விற்கும் தம்பதி
5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு: அதிமுக ஆட்சியில் அம்மா சிமென்ட் விற்பனையில் முறைகேடு நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
கோவை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கோடைக்கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
2ம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்பட்டது: ஐகோர்ட் கிளை ஆணை
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!