ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்காக 50 விடுதிகளில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
2022-12-09@ 19:51:24

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்காக 50 விடுதிகளில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகங்கள் அமைக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணத்திற்கு உருகொடுக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2022–2023 – ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கூட்டத் தொடரில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிட்டப்பட்டது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர் தங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பொருட்டும் 25 விடுதிகளில் நூலகங்கள் மற்றும் இணைய வழியில் படிப்பதற்கு ஏதுவாக 25 விடுதிகளில் இணையவழி நூலகங்கள் (e-Library) என மொத்தம் 50 விடுதிகளில் ரூ.70.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகங்கள் அமைக்கப்படும்.'
மேற்படி அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் (25 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் (Manual Library) + 23 ஆதிதிராவிடர் நல விடுதிகள் + 2 பழங்குடியினர் நல விடுதிகளில் (e – Library)) நூலகங்களை அமைக்க நிருவாக அனுமதியும், இதற்கான செலவினம் ரூ.69,95,850 (ரூபாய் அறுபத்தொன்பது இலட்சத்து தொன்னூற்று ஐந்தாயிரத்து எண்ணூற்று ஐம்பது மட்டும்) ஒப்பளிப்பு செய்து அரசாணை (நிலை) எண். 112, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந4(2)) துறை, நாள். 24.11.2022-இல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்