சம்பா தாளடி பயிரில் ஒருங்கிணைந்த முறையில் எலிகளை கட்டுப்படுத்துவது எப்படி?
2022-12-09@ 14:06:20

*வேளாண்மை அதிகாரி விளக்கம்
திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் தெரிவித்தாவது:திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில் சுமார் 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சி பருவம் முதல் கதிர் சூல் கட்டும் பருவம் வரை பெரும்பாலான பகுதிகள் உள்ளன. சில பகுதிகளில் கதிர் வெளிவரும் தருணத்தில் பயிர் உள்ளது.
இவ்வாண்டு இதுவரை பெருமழை, வெள்ளம் இல்லாததாலும் போதுமான இடைவெளியில் சீராக மழை பெய்து வருவதாலும் பயிர் செழித்து வளர்ந்து உள்ளது. எனினும் எலிகளின் பெருக்கமும், சேதாரமும் அதிகமாக தென்படுகிறது. எனவே எலிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தினால் தான் பயிரை சேதம் இன்றி காக்க முடியும். எனவே விவசாயிகள் கீழ்கண்ட முறைகளை பயன்படுத்தி எலிகளை கட்டுப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆந்தை குடில்: இரவு நேரத்தில் ஆந்தைகள் மற்றும் கோட்டான்கள் வயலின் நடுப்பகுதியில் அமர்ந்து எலிகளைப் பிடிக்க வசதியாக ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் ஆந்தைகள் அமர்துவதற்கு (மூங்கில் குச்சிகளை கொண்டு சிலுவை வடிவத்தில் ஆந்தை குடில்கள் அமைக்கலாம் அல்லது தென்னை மட்டைகளின் அடிப்பகுதியை வெட்டி நட்டு வைக்கலாம்). தஞ்சாவூர் கிட்டிகள் வைத்து எலிகளை பிடித்து அழிக்கலாம். வயல் வரப்பு ஓரங்களில் வசம்புத்தூள் அல்லது போர் ஏட் குருணை தூவி விடுவதால் எலிகள் வயலுக்குள் இறங்காமல் தடுக்கலாம். பெரிய வரப்புகள் மற்றும் புதர் மண்டி இருக்கும் இடங்களில் உள்ள எலி வலைகளை கண்டுபிடித்து வரப்புகளை வெட்டி எலிகளை பிடித்து அழிக்கலாம்.
ப்ரோமோ டைலூன் எனும் எலி மருந்தை வறுத்த அரிசி மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து சிறு சிறு பொட்டலங்கலாக மடித்து எலி நடமாட்டம் அதிகம் உள்ள வரப்புகளில் பெரிய மேடுகள் திடல்களில் இடவேண்டும் (ஒரு கிலோ வறுத்த அரிசியுடன் 10 மில்லி தேங்காய் எண்ணெய் 10 கிராம் ப்ரோமோ டைலான்) மருந்து கலக்கும் போது அவசியம். முகக்கவசம், கையுறை அணிய வேண்டும். எலி நஞ்சு பசைகளை தக்காளி துண்டுகளில் கலந்து இரவு நேரங்களில் வலைகளுக்கு அருகிலும் வரப்புகளிலும் இட வேண்டும். மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்து ஒருங்கிணைந்த முறையில் எலிகளை கட்டுப்படுத்தி பயிர்களை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மின் கம்பம் முறிந்து தலையில் விழுந்தது மின்சாரம் பாய்ந்து காட்டுயானை பலி
ரூ.7 லட்சத்தை பறிகொடுத்தார் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவமனை ஊழியர் தற்கொலை: திருச்சி அருகே சோகம்
அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலம் தமிழ்நாடு: நெல்லையில் குஜராத் அமைச்சர் புகழாரம்
தூத்துக்குடி ஆவின் உதவி பொதுமேலாளர் திடீர் சஸ்பெண்ட்
தீர்ப்புகள் மொழி பெயர்ப்பில் சென்னை ஐகோர்ட் முதலிடம்: பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி