ரூ.500 கோடி மோசடி வழக்கில் ‘ஹிஜாவ்’ குழும முக்கிய நிர்வாகி கைது
2022-12-09@ 00:14:53

சென்னை: சென்னையை தலைமை இடமாக கொண்டு ‘ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதன் கீழ் எஸ்.ஜி. அக்ரோ புராடெக்ட், அருவி அக்ரோ புராடெக்ட்ஸ், சாய் லட்சுமி, ஆர்.எம்.கே.பிரதர்ஸ் 4 துணை நிறுவனங்கள் உள்ளது. ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் குழும இயக்குநர்களாக சவுந்தரராஜன், அலெக்சாண்டர் ஆகியோர் உள்ளனர். இந்நிறுவனம் சார்பில், ரூ.1 லட்சத்துக்கு மாதம் 15% வட்டி தருவதாக விளம்பரம் செய்தனர். அதன் மூலம் தமிழகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் 4,500 பேர், சுமார் ரூ.500 கோடி வரை முதலீடு செய்தனர்.
ஆனால், உறுதியளித்தபடி 15% வட்டி வழங்காமலும், முதிர்வு அடைந்த பணத்தையும் தரவில்லை. இதையடுத்து, தலைமை அலுவலகம் மற்றும் கிளை நிறுவனங்களை மூடிவிட்டு இயக்குனர்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர். அதைதொடர்ந்து பொதுமக்கள் அளித்த ரகசிய தகவலின் படி, தலைமறைவாக இருந்து வந்த முக்கிய நிர்வாகியான சென்னை கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனி 5வது தெருவை சேர்ந்த மணிகண்டன்(51) என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் இருந்து வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
Tags:
Rs.500 crore fraud 'Hijav' group executive arrested ரூ.500 கோடி மோசடி ‘ஹிஜாவ்’ குழும நிர்வாகி கைதுமேலும் செய்திகள்
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 5 ஆண்டு கடுங்காவல்
புளியந்தோப்பில் போதைப்பொருள் கடத்தல் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சினிமா பைனான்சியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் கைது
கொள்ளை போனதாக பொய் புகார் 3 கிலோ தங்க நகையுடன் ஊழியர்கள் பிடிபட்டனர்
ஐஸ்வர்யா வீட்டை தொடர்ந்து ரஜினி வீட்டிலும் கைவரிசை புகார் அளித்ததோ 60 சவரன்; பறிமுதலோ ரூ. 3 கோடி நகைகள்: வேலைக்கார பெண், கார் டிரைவரிடம் விடிய விடிய விசாரணை
போலி பெண் டாக்டர் கைது
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!