SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சடலத்தில் இருந்து உயிருடன் வெளியே வந்த பாம்பு: பிரேத பரிசோதனையில் அலறி அடித்து ஓடிய பெண்

2022-12-08@ 16:34:38

நியூயார்க்: அமெரிக்காவில் இறந்தவரின் உடலில் பிரேத பரிசோதனையின் போது அவரது தொடையில்  இருந்து பாம்பு ஒன்று வெளியே உயிருடன் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெசிகா லோகன் என்ற 31 வயது பெண் அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் பிரேத பரிசோதனை செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். 9 ஆண்டுகளாக இந்த பணியில் உள்ள ஜெசிகா, தனக்கு நேர்ந்த ஒரு திகில் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:

ஒரு முறை, இறந்தவரின் உடலில் பிரேத பரிசோதனை செய்து கொண்டிருந்தேன். அப்போது அந்த உடலில் இருந்து பாம்பு ஒன்று உயிருடன் வெளிவருவதை பார்த்தேன். பாம்பு அந்த நபரின் தொடை பகுதியிலிருந்து வெளிவந்ததை பார்த்து அலறி அடித்துகொண்டு வெளியே ஓடி வந்து விட்டேன். ஊழியர்கள் அந்த பாம்பை பிடித்து அகற்றிய பிறகே மீண்டும் வேலையை தொடர்ந்தேன்.

ஒரு ஓடை அருகில் அந்த உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அப்போது உடலுக்குள் அந்த பாம்பு புகுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இறந்தவர்களின் உடல்கள் எங்கு எந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறது என்பதை பொறுத்து தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்ககூடும். குளிரான, உலர்ந்த இடங்களில் உடல்கள் இருந்தால், பூச்சிகள், ஆபத்தான உயிரினங்கள் பிரேதங்களை அணுகாது. ஆனால், சூடான, ஈரப்பதமான இடங்களில் பூச்சிகள் உடலில் அதிகம் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்