வங்கதேசத்திடம் தொடரை இழந்த பரிதாபம்; மிடில் ஓவர் பவுலிங் பிரச்னையை சரி செய்ய வேண்டிய கட்டாயம்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி
2022-12-08@ 15:45:07

மிர்பூர்: வங்கதேசத்திற்கு எதிராக மிர்பூரில் நேற்று நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் 2-0 என தொடரை இந்தியா பறிகொடுத்தது. வங்கதேசத்திடம் 2வது முறையாக இந்தியா ஒரு நாள் தொடரை இழந்துள்ளது. அதே நேரத்தில் வங்கதேசம் சொந்த மண்ணில் கடைசியாக ஆடிய 5 ஒருநாள் தொடரில் 4ஐ கைப்பற்றி உள்ளது.
தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: “எனது கையில் ஏற்பட்டுள்ள காயத்தால் பெரிய பாதிப்பு இல்லை. எலும்பு முறிவு எதுவும் ஏற்படாததால் என்னால் பேட்டிங் செய்ய முடிந்தது. வங்கதேசத்தின் 6 விக்கெட்டுகளை இலகுவாக கைப்பற்றிய எங்கள் பந்துவீச்சாளர்களால் மிடில் மற்றும் கடைசி ஓவர்களில் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க முடியவில்லை. கடந்த போட்டியிலும் இதேபோன்ற தவறே நடந்தது. மிடில் ஓவர்களில் நிலவும் பிரச்னையை கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மெஹ்தி ஹசன் மற்றும் மஹ்மதுல்லாஹ் மிக மிக சிறப்பாக விளையாடினர்.
ஒருநாள் போட்டிகளில் பார்ட்னர்சிப் மிக அவசியமானது, அது வங்கதேச அணிக்கு கிடைத்துவிட்டது. ஆனால் எங்களுக்கு அது கிடைக்கவில்லை. மிடில் ஓவர்களில் தைரியத்துடன் விளையாடுவது மிக முக்கியம். சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதும் பிரச்சனையாக உள்ளது, இதிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இந்திய அணிக்காக விளையாட வரும் வீரர்கள் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும், இதுகுறித்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் அமர்ந்து ஏன் வீரர்கள் முழு உடல் தகுதி பெறாமல் அணிக்கு வருகிறார்கள் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். இதை வீரர்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஒயிட்வாஷ் செய்வோம்: வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் கூறியதாவது: மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கேப்டனாக தொடரை வெல்வது கனவு. அது நனவானது. 240 ரன் இருந்தால் போதும் என்று முடிவு செய்தேன். அடுத்தடுத்து 6 விக்கெட் இழந்தாலும் மிராஸ் மற்றும் ரியாத் பாய் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. அடுத்த போட்டியிலும் வெற்றி பெறுவோம், என்றார்.
காயத்தால் 3 வீரர்கள் விலகல்; ஒருநாள் போட்டிக்கு முன்னுரிமை: மிர்பூர்: காயம் காரணமாக நாளை மறுநாள் நடைபெற உள்ள 3வது ஒரு நாள் போட்டியில் இருந்து ரோகித்சர்மா, தீபக் சாகர், குல்தீப் சென் விலகி உள்ளனர். இதுபற்றி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், ஒரு சில வீரர்கள் காயத்தால் அவதிப்படுகிறர்கள். ரோகித் சர்மா, தீபக் சாஹர் நிச்சயமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார்கள். குல்தீப் சென், தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். ரோகித் மும்பைக்கு சென்று, நிபுணருடன் கலந்தாலோசித்து டெஸ்ட் தொடரில் விளையாட முடியுமா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவார், என்றார்.
ேமலும் அவர் கூறுகையில் ஜனவரி முதல் ஒருநாள் போட்டிகளில் முழு பலம் கொண்ட அணி விளையாடும். ஐபிஎல்லுக்கு முன் 9 ஒரு நாள் போட்டிகள் உள்ளன. அந்த ஆட்டங்களில் நாங்கள் ஒரு நிலையான அணியாக விளையாடுவோம் என்று நம்புகிறோம். கடந்த 2 ஆண்டுகளில், 2 உலகக் கோப்பை இருந்ததால், டி20க்கு அதிக முன்னுரிமை கொடுத்தோம். அடுத்த 8-10 மாதங்கள், ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுப்போம் எனக் கூறினார்.
மேலும் செய்திகள்
மெஸ்ஸி 800
ரொனால்டோ உலக சாதனை
வாரியர்சுக்கு 183 ரன் இலக்கு
க்யூப்ஸ் சாம்பியனுக்கு வாழ்த்து
உலக பாக்சிங் பைனலில் சவீத்தி
சில்லி பாயின்ட்...
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி