வரி ஏய்ப்பு மோசடியில் டிரம்ப் நிறுவனங்கள்: குற்றச்சாட்டு உறுதியானது
2022-12-08@ 00:07:26

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் `தி டிரம்ப் ஆர்கனைஸேசன்’, `டிரம்ப் பே ரோல் கார்ப்’ ஆகிய இரண்டு நிதி நிறுவனங்களும் 13 ஆண்டுகளாக தவறான தகவல்களை அளித்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றப்பிரிவின் கீழான 17 குற்றச்சாட்டுகளிலும் இந்நிறுவனங்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டன. நியூயார்க் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில், தொடர்ந்து 2 நாட்களாக 10 மணி நேரம் நடந்த வக்கீல்கள் வாதத்துக்கு பிறகு குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டது. அதில், `இந்நிறுவனங்கள் 13 ஆண்டுகளாக போலி தரவுகளை வழங்கி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜனவரி 13ம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். அப்போது, 2 நிறுவனங்களுக்கும் தலா ரூ.13.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்று தெரிகிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்புக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
Tags:
Tax Evasion Fraud Trump Companies Indictment Confirmed வரி ஏய்ப்பு மோசடி டிரம்ப் நிறுவனங்கள் குற்றச்சாட்டு உறுதிமேலும் செய்திகள்
மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி கலைப்பு
ஆஸி. நியூசவுத்வேல்ஸ் மாகாண பொருளாளராக இந்தியர் பதவியேற்பு
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!
பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா ஊழியர்கள் 60 நாட்களில் வௌியேற வேண்டும் என்பதில் உண்மையில்லை: அமெரிக்க குடியுரிமை இயக்குநரகம் தகவல்
கனடாவில் 2வது முறையாக மகாத்மா காந்தி சிலை சேதம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!