SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம்: அமெரிக்கா வலியுறுத்தல்

2022-12-08@ 00:07:22

வாஷிங்டன்: ``இந்தியாவில் அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம் தர தொடர்ந்து வலியுறுத்துவோம்,’’ என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் மதங்களை பின்பற்ற மக்களுக்கு சுதந்திரம் அளிக்கின்றனவா? மாறாக, கொடுமைபடுத்துதல், சிறை தண்டனை, கொலை ஆகியவற்றில் ஈடுபடுகிறதா என்பதை அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் கண்காணிக்கிறது. இதனை அடிப்படையாக கொண்டு உலக நாடுகளில் மத சுதந்திரத்தின் தரத்தை பட்டியலிட்டு வருகிறது.  கடந்த சில ஆண்டுகளாக இந்த பட்டியலில் இருந்த இந்தியா தற்போது `கவலைக்குரிய நாடுகள்’ பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறிய போது, ``இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. அங்கு பல மதங்கள் பின்பற்றப்படுகின்றன. இருப்பினும், இந்தியா தொடர்பான சில கவலைக்குரிய தகவல்கள் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம் அளிக்க அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தும், இந்தியாவின் மத சுதந்திரம் தொடர்பான சூழ்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும்,’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்