ரஷ்யா விமானத் தளங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்
2022-12-07@ 00:08:16

கீவ்: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா அதன் மீது கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர், 9 மாதங்களை கடந்து நீடிக்கிறது. இதில் மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவியாக ஆயுதங்கள், போர் கப்பல்கள், விமானங்களை வழங்கி வருகின்றன. இதனிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி `தெற்கு ரோஸ்டோவ் பகுதியில் இருந்து காஸ்பியன் கடல்பகுதியில் ரஷ்யா ஏவிய 38 ஏவுகணைகள், கருங்கடல் பகுதியில் இருந்து ஏவிய 22 ஏவுகணைகள் என நேற்று முன்தினம் ரஷ்ய படையின் 60 ஏவுகணைகளை வழிமறித்து அழித்தனர்.
இந்த ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்,’ என்று தெரிவித்தார். குளிர்காலம் நெருங்குவதால், உக்ரைன் படையினருக்கு முடிந்தளவு இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ரஷ்யா பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், தனது நாட்டின் 2 விமானத் தளங்கள் மீது உக்ரைன் படைகள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் செய்திகள்
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!
பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா ஊழியர்கள் 60 நாட்களில் வௌியேற வேண்டும் என்பதில் உண்மையில்லை: அமெரிக்க குடியுரிமை இயக்குநரகம் தகவல்
கனடாவில் 2வது முறையாக மகாத்மா காந்தி சிலை சேதம்
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு 6 பேர் பலி
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!