அதிமுக பொதுக்குழு வழக்கில் தொடர்ந்து அவகாசம் கேட்பதா? ஓ.பி.எஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
2022-12-07@ 00:08:08

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தொடர்ந்து கால அவகாசம் கேட்பதா என ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஜூலை 11ம் தேதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ்மகேஸ்வரி மற்றும் துலியா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமாசுந்தரம்,‘‘அதிமுக கட்சி பணிகள் அனைத்தும் அப்படியே நிலுவையில் உள்ளது. எனவே தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவாவது பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார், ‘‘எங்களது தரப்பு ஆதரவாளரான வைரமுத்துவுக்கு ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமாருக்கு உடல்நலம் சரியில்லாததால் வழக்கை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘கட்சி விவகாரம் என்பதால் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என கூறினீர்கள்.
அதன் பிறகு தொடர்ந்து ஒத்திவைப்பு கோருகிறீர்கள். தொடர்ந்து கால அவகாசம் கேட்டுக்கொண்டே இருப்பீர்களா? இது நீதிமன்றத்திற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது’’ என நீதிபதிகள் ஓ.பி.எஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர், வழக்கு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் என்ன நிவாரணத்தை எதிர்பார்க்கிறீர்கள்என்பது குறித்த விவரங்களை இடைக்கால மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
கேரளாவில் இன்று முதல் மின் கட்டணம் உயர்வு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே?.. ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்..!
அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி: உலக பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்
சாமானிய மக்களுக்கு பலன் தரும் பட்ஜெட்; வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..!
ஜெகன் அண்ணா காலனியில் வீடுகள் கட்டும் பணியை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும்-சித்தூர் ஆணையாளர் உத்தரவு
திருப்பதி பைரெட்டிபள்ளி பகுதியில் ₹3.25 கோடியில் புதிய சிமெண்ட் சாலைகள், கால்வாய்கள்-எம்பி தகவல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!