பாலியல் பலாத்கார சட்டத்தை கடுமையாக்க சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு
2022-12-06@ 18:59:16

ஜெனிவா: சுவிட்சர்லாந்தின் பாலியல் பலாத்காரச் சட்டத்தில் திருத்தங்கள் தேவை என்பது குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. ஸ்பெயின், ஸ்வீடன், டென்மார்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் ‘ஒருவரின் வெளிப்படையான அனுமதியின்றி, பாலியல் செயல்களில் ஈடுபடுவது’ கற்பழிப்பு குற்றமாக கருதப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் தற்போதைய சட்டத்தின்படி, ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்வது, அதற்கு அந்த பெண்ணிடமிருந்து எதிர்வினை கிளம்புவது ஆகிய செயல்கள் நடந்தால் மட்டுமே, அது கற்பழிப்பு குற்றமாக கருதப்படுகிறது. அந்நாட்டின் பாலியல் பலாத்காரச் சட்டத்தில் இவை வருகின்றன.
இந்த நிலையில், சுவிட்சர்லாந்தின் தற்போதைய பாலியல் பலாத்காரச் சட்டத்தில் திருத்தங்கள் தேவை. ஒரு பெண் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும், அவளுடைய சம்மதமின்றி பாலியல் வன்புணர்வு செய்வதும் கற்பழிப்பு முயற்சி குற்றமாக கருதப்பட வேண்டும். அதேபோல ஆண்-பெண் என யாராக இருந்தாலும் பாலின பாகுபாடின்றி யார் பாதிக்கப்பட்டாலும், பாலியல் பலாத்காரச் சட்டத்தில் கற்பழிப்பு குற்றமாக கருதப்பட வேண்டும் என்று பரவலான கருத்து கிளம்பியுள்ளது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் தற்போதைய பாலியல் பலாத்காரச் சட்டத்தில் திருத்தங்கள் தேவை என்பது குறித்து நேற்று சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடந்தது.
ஒரு நபர் வெளிப்படையாக எதிர்த்தால் மட்டுமே, அது கற்பழிப்பாகக் கருதப்படும் என்ற நடைமுறைக்கு நாடாளுமன்றத்தின் மேல்சபையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வாக்கெடுப்பு நடந்தது. இந்நிலையில், தற்போதைய பாலியல் பலாத்காரச் சட்டத்தில் திருத்தங்கள் தேவை என சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நேற்று வாக்கெடுப்பு நடந்தது. புதிய சட்ட திருத்தத்தின்படி, ஒருவருடைய அனுமதியின்றி அவரிடம் பாலியல் செயல்களில் ஈடுபடுவது கற்பழிப்பு குற்றம் என்று சேர்க்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.
ஆனால், அது குழப்பத்தை உருவாக்கும் மற்றும் நடைமுறைப்படுத்துவது கடினம் என்று கூறி பல வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த விருப்பத்தை எதிர்த்தனர். எனினும், பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைகளுக்காக நடந்துவரும் பல ஆண்டு செயல்பாட்டிற்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற இரு சபைகளிலும் இவ்விவகாரம் குறித்த ஒருமித்த முடிவு ஏற்பட்ட பின், இந்த விஷயம் சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக அமைப்பின் கீழ், பொதுமக்கள் வாக்கெடுப்புக்குச் செல்லும். அதன்பின்னரே சட்டம் அமலாகும்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவின் இந்தியாவுக்கான தூதராக கார்செட்டி பதவியேற்பு: கமலா ஹாரிஸ் பங்கேற்பு
லண்டன் நாடாளுமன்ற சதுக்கம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்
புளோரிடா பல்கலை. அறங்காவலர் குழுவில் இந்தியர்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசு ஊழியர்கள் சீனாவின் `டிக்-டாக்’ செயலியை பயன்படுத்த தடை!
பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டிவிட்டரில் தகவல்!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி