ஒரே ஆண்டில் 500 பேருக்கு தூக்கு
2022-12-06@ 17:25:53

டெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி (22) என்ற இளம்பெண்ணை ஈரான் அறநெறி போலீசார் கைது செய்தனர். ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி மாஷா அமினியை அறநெறி போலீசார் கடுமையாக தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈரான் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு ஈரானில் இதுவரை குறைந்தது 504 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்று நார்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. அவர்களில் 4 பேருக்கு இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஈரான் அரசாங்கம் தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2021ம் ஆண்டு, குறைந்தது 333 பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த நிலையில், நியாயமான விசாரணை இல்லாமல் 504 நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்று மனித உரிமைகள் குழு இயக்குனர் மஹ்மூத் அமிரி-மொகத்தம் கூறினார். மரணதண்டனைகள் மூலம் சமூகத்தில் அச்சத்தை உருவாக்க வேண்டும் என்னும் நோக்கத்திலும், அரசின் உளவுத்துறை தோல்விகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்திலும் இந்த மரணதண்டனைகள் இருந்தன என்று மஹ்மூத் அமிரி-மொகத்தம் கூறினார்.
மேலும் செய்திகள்
மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி கலைப்பு
ஆஸி. நியூசவுத்வேல்ஸ் மாகாண பொருளாளராக இந்தியர் பதவியேற்பு
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!
பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா ஊழியர்கள் 60 நாட்களில் வௌியேற வேண்டும் என்பதில் உண்மையில்லை: அமெரிக்க குடியுரிமை இயக்குநரகம் தகவல்
கனடாவில் 2வது முறையாக மகாத்மா காந்தி சிலை சேதம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!