கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு: இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என தகவல்..!
2022-12-06@ 10:14:37

பொகடா: கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரித்துள்ளது. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ரிசரால்டா மாகாணத்தில் மிகப்பலத்த மழை கொட்டியது. இப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது.
இந்நிலையில், கனமழையால் பியூப்லோ ரிக்கோ என்ற மலை பகுதியில் மழையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அப்போது மலைப்பாதை வழியே சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தை டன் கணக்கான பாறைகளும், மண்ணும் மூடிவிட்டன. தகவலறிந்து வந்த பேரிடர் மேலாண்மை படை பாறைகளை அகற்றி மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இருப்பினும் அவர்களால் 9 பேரை மட்டுமே மீட்க முடிந்தது.
பேருந்தில் பயணித்தவர்களில் 33 பேர் உடல் நசுங்கியும், மூச்சு திணறியும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 33 பேரில் 5 பேர் சிறுவர்கள் ஆவர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தில் பயணித்தோரின் மொத்த எண்ணிக்கை தெரியாததால் இடிபாடுகளில் வேறுயாரும் சிக்கியுள்ளார்களா என மீட்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் இருந்து போப்பாண்டவர் இன்று டிஸ்சார்ஜ்
டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கு வரலாற்றில் இருண்ட நாள்: நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி கடும் கண்டனம்
அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சராக இந்திய வம்சாவளி தேர்வு
போட்டியின்றி தேர்வு உலக வங்கி தலைவராக அஜய் பங்கா
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!