ஆந்திர மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் வந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முா்மு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்
2022-12-05@ 14:09:00

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் வந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முா்மு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவரான பிறகு, ஆந்திர மாநிலத்துக்கு முதல்முறையாக இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக வருகை தந்த திரெபதி முா்முவுக்கு அமராவதியில் மாநில அரசு சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் காணொலி வழியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆந்திராவில் ராயசொட்டி-அங்கல்லு இடையே ரூ.925 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். மேலும், கிருஷ்ணா மாவட்டம் நிம்மகூருவில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அமைத்துள்ள ராணுவ தளவாட ஆலையை காணொலி வழியாகத் தொடக்கி வைத்தாா்.
பின்னர் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படை தினத்தில் கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நீா்மூழ்கிக் கப்பல்கள் ஐஎன்எஸ் சிந்துகீா்த்தி, ஐஎன்எஸ் தரங்கிணி, ஹெலிகாப்டா்கள் மூலம் நடைபெற்றதை பார்வையிட்டு பின்னர் நேற்று இரவு திருப்பதி வந்தார். இரவு திருமலையில் தங்கி இன்று காலை ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, துணை முதல்வர் நாராயணசாமி, ஒன்றிய, மாநில சுற்றுலா அமைச்சர் கிஷன் ரெட்டி, ரோஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குடியரசு தலைவர் திரெபதி முர்முவை வரவேற்று சுவாமி தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அலிபிரியில் உள்ள கோ சப்த பிரதட்சன மந்திரத்தில் பார்வையிட்டு பசுவுக்கு பூஜை மேற்கொண்டு பசு எடைக்கு நிகரான 435 கிலோ தீவனங்களை காணிக்கையாக வழங்கினார். இதற்கான ரூ. 6000 தொகையை கோ பிரதக்ஷணம் மந்திர அதிகாரிகளிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பத்மாவதி பல்கலை மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து டெல்லி செல்கிறார்.
மேலும் செய்திகள்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல்: ரூ.1.14 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி
தனது வீட்டை தாக்கிய பழங்குடி வகுப்பினர் மீது நடவடிக்கை வேண்டாம்: எடியூரப்பா பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்
ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு
டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்