SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விபத்தில் மூளைச்சாவு வாலிபர் உறுப்புகள் தானம்

2022-12-05@ 03:54:12

சேலம்: சேலம் மாவட்டம், மல்லூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (26). பி.காம்., பட்டதாரி. சேலம் சேகோ சர்வில் வேலை செய்து வந்தார். கடந்த 30ம் தேதி இரவு பணி முடிந்து, வீட்டுக்கு டூவீலரில் சென்றபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி மோதி தலையில் பலத்த காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது உறுப்புகளை தானம் செய்ய தந்தை முருகன் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை அறுவை சிசிக்சை மூலம் எடுக்கப்பட்டன. இதில் இதயம் மற்றும் நுரையீரல் சென்னைக்கும், கல்லீரல் கோவைக்கும், ஒரு சிறுநீரகம் ஈரோட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகமும், இரு கண்களும், சேலம்  அரசு மருத்துவமனையிலேயே நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்