கிராம உதவியாளர் பணிக்கான வினாத்தாள் வலைத்தளத்தில் ‘லீக்’: மாற்று வினாத்தாள் மூலம் தேர்வு
2022-12-05@ 00:07:13

மதுரை: கிராம உதவியாளர் பணியிடத்திற்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால், மாற்று வினாத்தாள் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு மாவட்டத்தில் 22 மையங்களில் நேற்று நடந்தது. இத்தேர்வு எழுத 13,958 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை 11,265 பேர் எழுதினர். இவர்கள், கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக இருப்பதால், தமிழ், ஆங்கிலத்தில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இதற்காக கேள்வியை கொடுத்து, பதில் எழுதும் முறையில் தேர்வு இல்லை. இதற்குப்பதிலாக தமிழில் ஒரு பாராவும், அதேபோல், ஆங்கிலத்தில் ஒரு பாராவும் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட பாராவில் உள்ள எழுத்துகளை பார்த்து விடைத்தாளில் அப்படியே, பிழையின்றி எழுத வேண்டும். முதல் அரைமணி நேரம் தமிழ் மொழிக்கான எழுத்து திறனறித்தேர்வும், அடுத்த அரைமணி நேரம் ஆங்கில மொழிக்கான எழுத்து திறனறித்தேர்வும் நடைபெற்றது. ஏராளமான பட்டதாரி இளைஞர்கள், பெண்களும் எழுதினர்.
ஒவ்வொரு தாலுகாவிலும், ஒவ்வொரு விதமான தலைப்பில், பாரா கொடுக்கப்பட்டது. இதில், மதுரை தெற்கு தாலுகாவில் கொடுக்கப்பட்ட ஆங்கில மொழிக்கான பாரா நேற்று முன்தினம் இரவு வெளியானதாகவும், இந்த கேள்வித்தாள் தன்னிடம் உள்ளது என்றும், ரூ.10 ஆயிரம் கொடுத்தால், பிரதி தருவதாகவும் ஒருவர் வீடியோவில் பேசி, சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனைக் கண்ட மதுரை தெற்கு தாலுகா தாசில்தார் கல்யாணசுந்தரம், உடனே ஆங்கிலத்திற்கான கேள்வித்தாளை மாற்றி, இரவோடு இரவாக தயாரித்து, நேற்று புதிய வினாத்தாள் மூலம் தேர்வு நடந்தது.
இதுதொடர்பாக மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் கூறுகையில், ‘‘வினாத்தாள் வெளியானது தொடர்பாக போலீசில் தாசில்தார் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
மேலும் செய்திகள்
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 31.66 லட்சம் உண்டியல் காணிக்கை
பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சி: ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர்
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்; பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்..!
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!