போருக்கு தயார் இந்தியாவை சீண்டும் பாக். ராணுவ புதிய தளபதி
2022-12-05@ 00:02:51

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த போரையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அந்நாட்டின் ராணுவ தளபதியாக புதிதாக பதவியேற்ற ைசயத் ஆசிம் முனீர் கூறினார். பாகிஸ்தான் ராணுவ தளபதியாக சையத் ஆசிம் முனீர் அண்மையில் பதவி ஏற்றார்.
அவர் பாகிஸ்தான் நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியா தரப்பில் சிலர் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார்கள். பாகிஸ்தான் ராணுவம் எப்போதுமே தயார் நிலையில் இருக்கிறது. எங்களது தாய் நாட்டை காக்கவும், எதிரியை எதிர்த்து போரிடவும் தயாராக இருக்கிறோம். போர் எங்கள் மீது திணிக்கப்பட்டால் அதை எதிர்கொள்ளவும் தயார். இவ்வாறு சையத் ஆசிம் முனீர் கூறினார்.
இந்தியாவை சீண்டும் வகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி இந்திய வெளியுறவுத் துறை உடனடியாக கருத்து எதையும் தெரிவிக்க வில்லை.
மேலும் செய்திகள்
பெல்ஜியம் சாக்லேட்டில் உருவான வண்ண ஈஸ்டர் முட்டைகள்: சமையல் கலைஞர்கள் வடிவமைத்த முட்டைகளை ரசித்த மக்கள்
இடி, மழையுடன் பனிப்புயல்: கனடாவில் திடீரென மாறிய வானிலையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்.. மக்கள் அவதி..!!
சுவாசத் தொற்றுநோய் காரணமாக போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதி : வாட்டிகன் அறிக்கை
மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி கலைப்பு
ஆஸி. நியூசவுத்வேல்ஸ் மாகாண பொருளாளராக இந்தியர் பதவியேற்பு
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!