திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது: டிஜிபி அறிவுறுத்தல்
2022-12-04@ 20:28:17

சென்னை: திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். போக்சோ வழக்குகளில் கைது நடவடிக்கை மற்றும் புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரத்தை வழக்கு கோப்பில் பதிவு செய்து, அதற்கான காரணத்தை பதிய வேண்டும்.
போக்சோ வழக்குகளில் கைது மற்றும் புலனாய்வு தொடர்பான சுற்றறிக்கையில்;
உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு கிழ்கண்ட அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.
அதன்படி: கிழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது. புலன் விசாரணை அதிகாரிகளுக்கு
i) திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்களில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது,
ii) அதற்கு பதிலாக, கு.வி.மு.ச பிரிவு 41(4) ன் படி சம்மன் அனுப்பி எதிரிகளை எதிர் மனுதாரரை விசாரணை செய்யலாம்.
iii) குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு
செய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
iv) குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்யப்படவேண்டும்.
v) முக்கிய வழக்குகளில், இறுதி அறிக்கையினை (குற்றப்பத்திரிக்கை)உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், அதுவும் குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிர ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்கவேண்டும்.
இவ்வறிவுரைகளை மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்றுமாறு சைலேந்திரபாபு காவல்துறை தலைமை இயக்குநர் / காவல் படைத் தலைவர் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்
அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்..!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு: நாளை மறுநாள் தீர்ப்பு..!
சென்னையில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய, சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை
காதல் திருமணத்திற்கு எதிரான ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்..!
அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: 4 கிலோ கஞ்சா பறிமுதல்..!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!