ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் பல் மருத்துவ சிகிச்சை: சென்னை மாநகராட்சி ஏற்பாடு
2022-12-04@ 17:13:46

சென்னை: சென்னை மாநகராட்சியில் 16 ஆரம்ப சுகாதார மையங்களில் தலா ஒரு பல் மருத்துவர் என 16 பல் மருத்துவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆரம்ப சுகாதார மையங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களுக்கு பற்களில் சொத்தை, பற்களில் தொற்று, ஈறுகளில் தொற்று, பற்களில்சீழ், பற்களில் நோய்த் தாக்கம், பற்களில் சிதைவு, அளவிடுதல், பற்களில் மறுசீரமைப்பு, நோயுற்ற பற்களை எடுத்தல் போன்ற பல்வேறு பல் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன,
பல் சிகிச்சை மையங்களின் முகவரிகள் பின்வருமாறு:
மண்டலம் கோட்டம் பல்மையங்கள் முகவரி
மண்டலம்-1 11 திருவொற்றியூர் ஆரம்ப சுகாதார மையம் 185, திருவொற்றியூர் நெடுஞ்சாலை,
மண்டலம்-2 21 மணலி ஆரம்ப சுகாதார மையம் 1,நெடுஞ் செழியன் சாலை, மணலி,
மண்டலம்-3 32 லட்சுமிபுரம் ஆரம்ப சுகாதார மையம் 32, கங்கையம்மன் கோயில் தெரு, லட்சுமிபுரம்,
மண்டலம்-4 45 சத்திய மூர்த்தி நகர் ஆரம்ப சுகாதார மையம் 17, சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு, வியாசார்பாடி,
மண்டலம்-5 53 கொண்டி தோப்பு ஆரம்ப சுகாதார மையம் 60, பேசின் பாலம் ரோடு, கொண்டிதோப்பு,
மண்டலம்-6 68 செம்பியம்ஆரம்பசுகாதாரமையம் 238, பேப்பர் மில்ஸ் ரோடு, செம்பியம்,
மண்டலம்-7 79 ஒரகடம் ஆரம்ப சுகாதார மையம் 26, காந்தி நெடுஞ்சாலை ரோடு, ஒரகடம், அம்பத்தூர்,
மண்டலம்-8 97 அயனாவரம் ஆரம்ப சுகாதார மையம் எண்.29, யுனைடெட் இந்தியா நகர், 1 வது தெரு,
மண்டலம்-9 120 மீர்சாகிப்பேட்டை ஆரம்ப சுகாதார மையம் 6, முத்தையா முதலி பிராதான சாலை, திருவல்லிக்கேணி,
மண்டலம்-10 138 ஜாபர்கான் பேட்டை ஆரம்ப சுகாதார மையம் 1, ஐய்யாவு 4வது தெரு, ஜாபர்கான் பேட்டை,
மண்டலம்-11 148 காமராஜர்ஆரம்பசுகாதார மையம் காமராஜர் உயர் சாலை, பெரியார் நகர், தனலட்சுமி நகர், மேட்டுக் குப்பம்,
மண்டலம்-12 156 முகலிவாக்கம் ஆரம்ப சுகாதாரமையம் பாடசாலை தெரு, பஞ்சாயத்து எதிர்புறம், முகலிவாக்கம்,
மண்டலம்-13 182 திருவான்மியூர் ஆரம்ப சுகாதார மையம் 2, 8வது தெரு, காமராஜ் நகர், திருவான்மியூர்,
மண்டலம்-14 185 பாலவாக்கம் ஆரம்ப சுகாதார மையம் கிழக்கு கடற்கரைசாலை, பாலவாக்கம்,
மண்டலம்-15 195 கண்ணகி நகர் ஆரம்ப சுகாதார மையம, 2வது மெயின்ரோடுஒக்கியம்,துரைப்பாக்கம்,
மண்டலம்-15 200 செம்மஞ்சேரி ஆரம்ப சுகாதார மையம் முதல்மெயின்ரோடு, சுனாமிநகர்எதிரில், பேருந்து நிலையம்,
மேற்குறிப்பிட்ட 16 ஆரம்ப சுகாதார மையங்களிலுள்ள பல் மருத்துவ சிகிச்சைப் பிரிவில் கடந்த ஒரு வார காலத்தில் 1951 நபர்கள் பல் தொடர்புடைய சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.எனவே, பொதுமக்கள் பற்கள் தொடர்புடைய பாதிப்புகளுக்கு மாநகராட்சியால் மேற்கண்ட ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படும் பல் மருத்துவ சிகிச்சைகளை இலவசமாகப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் செய்திகள்
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை: 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை அன்புமணி கண்டனம்
உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!